வவுனியாவில் சர்வதேச பெண்கள் தினம்!!

384

 
பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாரபட்சங்களுக்கும் எதிரான சமுதாயத்தை நடைமுறைப்படுத்திக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச பெண்கள் தின வைபவம் வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று (14.03) காலை 10 மணியளவில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பனவற்றின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மகளிர் விவகார தேசிய அமைச்சின் செயலாளர் திருமதி எமில்டா சுகுமார், சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளான சி. தீஸ்குமார், ந.தேவகிருஸ்ணன், தே.தேவசாந்தன், வடமாகணத்திலுள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், தமிழ் முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் கலை நிகழ்வுகள், வடபகுதி குடும்ப தலைமைத்துவப் பெண்கள் தொடர்பான 300 குடும்பங்களில் மேற்கொண்ட ஆய்வறிக்கை வெளியீடு அது தொடர்பான விளக்கம் இடம்பெற்றதுடன், முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு காணி போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கிப் போராட்டத்தை வெற்றி கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பெண் கொளரவிக்கப்பட்டமை நிகழ்வில் சிறப்பம்சமாக இடம்பெற்றது.