கனடாவில் பனிப்புயல் தாக்கத்தினால் நூற்று கணக்கான விமான சேவைகள் இரத்து!!

527

கனடா ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கியுள்ள பனிப்புயல் காரணமாக 400ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பெரும்பகுதிகளை பனிப்புயல் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலை 8 மணியளவில் 222 வந்தடையும் மற்றும் 198புறப்படும் விமான சேவைகள் கால நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாள் பூராகவும் மேலதிக தாமதங்கள் எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பயணிகள் தங்களது விமான நிலவரங்களை விமான நிலையத்திற்கு செல்ல முன்னர் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பெரும்பாலான பகுதிகள் விசேட காலநிலை எச்சரிக்கை தொடரந்து அமுலில் இருக்கும். செவ்வாய்கிழமை மாலை அளவில் 5 முதல் 10சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்பாகத்தில் பனி தங்கிவிட்ட நிலையில் ரொறொன்ரோவின் கிழக்கு பாக-ஹமில்ரன், ஓக்வில் மற்றும் நயாகரா பிரதேசங்கள் இன்னமும் குளிர் கால புயல் எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் 20 முதல் 30 சென்ரிமீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது. கால நிலைக்கேற்ற வகையில் வாகனம் செலுத்தும் தன்மைகளை சரிசெய்யுமாறு அதிகாரிகள் சாரதிகளை அறிவுறுத்துகின்றனர்.

இரவு நேரம் மற்றும் செவ்வாய்கிழமை அதிகாலை எண்ணிக்கையான மோதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை 401 மில்ரனிற்கு அருகாமையில் டிரக்டர் டிரெயிலர் ஒன்று உருண்டு விபத்திற்குள்ளாகியது.

புறொக் பல்கலைக்கழக நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்டன. மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.செவ்வாய்கிழமை மாலை வகுப்புக்கள் வழமைக்கு திரும்பலாம் என கூறப்பட்டுள்ளது.