அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் வைத்தியர்!!

239

அமெரிக்காவில் மோசமான மருத்துவமனையை, பிராந்தியத்தின் சிறந்த மருத்துவமனையாக மாற்றிய இலங்கை பெண் வைத்தியர் விருது பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் ஹெல்த் செவன் பன்னாட்டு மருத்துவமனை குழுமத்திற்கான 140 புனர்வாழ்வு மருத்துவமனையின் இயக்குநர்களில் சிறந்தவர் யார் என்ற தெரிவு நடைபெற்றது. அதில் இலங்கை மருத்துவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

ஷிரானி ஜயசூரிய என்ற பெண் மருத்துவரே முதலாம் இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மருத்துவர் ஷிரானி,

5 பிராந்தியங்களில் நான் சேவை செய்யும் மத்திய அட்லாண்டிக் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 28 மருத்துவமனைகள் உள்ளன. அவற்றின் ஒன்றில் மருத்துவ இயக்குனராக நான் சேவை செய்கின்றேன். அங்கு வருடாந்தம் அனைத்து பிராந்தியங்களிலும் சிறந்த மருத்துவ இயக்குனர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதற்கமைய எனது பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி என்னால் வெற்றிபெற முடிந்தது. நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கடமையை பொறுப்பேற்றேன். நான் இந்த மருத்துவமனையை பொறுப்பேற்கும் இறுதி 10 மருத்துவமனைகளில் ஒன்றாக காணப்பட்டது.

எனினும் தற்போது முதல் 10 இடங்களுக்குள் இந்த மருத்துவமனையை கொண்டுவர எங்களால் முடிந்தன. ஒரு வருடத்திற்குள் மருத்துவமனையை முழுமையாக மாற்றுவதற்கு என்னால் முடிந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.