வவுனியா ஆனந்தர்புளியங்குளம் நொச்சிகுளம் கிராம மக்களுடன் வடக்கு சுகாதார அமைச்சர் சந்திப்பு!!

284

 
வவுனியா வடக்கு அனந்தர்புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள நொச்சிக்குளம் மீள்குடியேற்ற கிராம மக்களை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் சந்தித்து கலந்தரையாடினார்.

இதன்போது அங்கு மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் எதிர்நோக்கம் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது மக்களால் பின்வரும் விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன

கிராம அபிவிருத்தி சங்கம், கமக்காரர் அமைப்பு, மாதர் சங்கம் என்பனவற்றின் உருவாக்கம், நொச்சிக்குளம் முத்துமாரி வித்தியாலய பாடசாலைக்கான அடிப்படை வசதிகளை பெறல், மலசலகூடம்குடிநீர் வசதி, உள்ளக வீதிகள் புனரமைப்பு உன்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அமைச்சர் பிரதேச சபை செயலாளருடன் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் முக்கியமான வீதியாகிய பழையவாடி – நொச்சிக்குளம் வீதி திருத்தம் செய்ய உறுதியளிக்கப்ட்டது.

முன்பள்ளி மற்றும் பாடசாலை ஆசிரியர் இன்மை, அத்துடன் பகுதிநேர ஆசிரியருக்கான கொடுப்பனவு வீட்டுத்திட்டம் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் படிப்படியாக மக்களின் குறைகள் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சருடன் முன்னைநாள் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பூபாலசிங்கம், அமைச்சரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், நொச்சிகுளம் பாடசாலை அதிபர் அகியோர் உட்பட கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.