வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ள விசேட தேவைக்குட்பட்ட இளைஞன்!!

696

 
அசாத்தியமான அடைவுகளை சாத்தியமாக்குவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் போது அது சாத்தியம். அந்த அடிப்படையில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து தேக்கவத்தை சீட் – வலுவூட்டல் வளாகத்தில் கல்வி கற்று தற்போது விளையாட்டு துறையில் தனக்கென ஒரு இடத்தை வகித்து வரும் சிதம்பரபுரத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் – தர்மசீலன் என்னும் காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச முடியாத இவ் இளைஞன் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள காது கேளாதோர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்கு பெற தெரிவாகியுள்ளார்.

இவர் தெரிவான இப்போட்டியானது வரலாற்று ரீதியாகவும் திறன் அடிப்படையில் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான ஒரு சந்தர்ப்பமும் ஆகும். அதே நேரத்தில் வடக்கில் அதிலும் வவுனியாவை சேர்ந்த ஒரு இளைஞரிற்கு இப்படியான வாய்ப்பு கிடைப்பது வவுனியாவிற்கும் அதே போன்று வட மாகாணத்திற்கும் பெருமை ஏற்படுத்தி தரும் செயற்பாடாகும்.

இப் போட்டியில் பங்கு கொள்வதற்காக 20.03.2017 அன்று இலங்கையில் இருந்து புறப்பட்டு 21.03.2017 தொடக்கம் தொடர்ந்து 29.03.2017 அன்று வரை 09 நாட்கள் தொடச்சியாக பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று மீண்டும் அவர் 31.03.2017 அன்று இந்தியாவில் நடைபெறும் தொடர் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 30.03.2017 அன்று இந்தியாவிற்கு சென்று அங்கு 31.03.2017 தொடக்கம் 13.04.2017 வரை போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் 15.04.2017 அன்று மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளார்.

எனவே இப்படியான ஒரு வீரர் எம் மண்ணிற்கு கிடைத்ததையிட்டு பெருமை கொள்வதோடு இவருக்கு கைகொடுக்க வேண்டிய கடமை எமக்குள்ளது.

இவர் இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதனால் உங்களால் முடிந்த நிதி உதவியினை இவரது வங்கி கணக்கிற்கு (தேசிய சேமிப்பு வங்கி கணக்கு 100880230120) செலுத்துவதன் மூலம் உங்களது பங்களிப்பும் ஆசிர்வாதமும் எங்கோ ஓர் மூலையில் பிறந்து சாதிக்க துடிக்கும் பாலகிருஸ்ணன் – தர்மசீலன் என்னும் இளைஞனின் சாதனைத் துடிப்பிற்கு பலமாக அமையும்.

17.03.2017 வெள்ளிக்கிழமை இவரைப்பாராட்டி கௌரவித்து வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று வைரவபுளியங்குளத்தில் 6ம் ஒழுங்கையில் உள்ள வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. விளையாட்டுத் துறையில் உள்ளோர் சமூக ஆர்வலர்கள் இவரை வாழ்த்தி வழிஅனுப்ப வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.