ஆடம்பர காரை கழுதைகள் மூலம் இழுத்துச் சென்று சேர்விஸ் சென்டரைக் கலங்கடித்த வாடிக்கையாளர்!!

439

 
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், தனது ஆடம்பர கார் பழுதடைந்ததால் சேர்விஸ் சென்டருக்கு அக் காரை கழுதைகள் மூலம் இழுத்துச் சென்றுள்ளார்.

கார் கம்பெனிகள் என்னதான் தரமான காரைத் தயாரித்தாலும், சேர்வீஸ் விஷயத்தில் சொதப்பினால் அவ்வளவு தான். வாடிக்கையாளர் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். புதுசா கார் வாங்கினீங்களே… எப்படி இருக்கு?’ என கார் வாங்கிய ஒருவரிடம் கேட்டால், ‘கார்லாம் நல்லாத்தான் இருக்கு… ஆனா ஏண்டா வாங்கினோம்னு இருக்கு’ என நூடுல்ஸாக நொந்துபோகும் வாடிக்கையாளர் களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

அண்மையில் இப்படித்தான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கார் உரிமையாளர், கழுதைகளை வைத்து தன் காரைக் கட்டி இழுத்து தெருத்தெருவாக ஊர்வலம் சென்று தன் வெறுப்பின் உச்சத்தைக் காட்டியிருக்கிறார்.

லூதியானாவைச் சேர்ந்த ஒருவர், 2015ல் ஸ்கோடா நிறுவனத்தின் ஒக்டேவியா காரை புக் செய்திருக்கிறார். ஒக்டேவியா கார்கள் கட்டுமானத்தரத்துக்கும், ஸ்டைலுக்கும், ஃபன் டிரைவிங்குக்கும் பெயர் பெற்றவை. பாறை போன்ற இதன் டீரடைன குவாலிட்டியில் மயங்கித்தான் இதை புக் செய்தார் அவர்.

‘‘ஸ்கோடா கார்களின் இன்ஜின் ரீஃபைன்மென்ட் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று நண்பர்கள் எல்லாரும் சொன்னார்கள். ‘அம்பாஸடரே நெளிந்து போகும்… அந்தளவு ஸ்ட்ரோங்காக இருக்கும்’ என்றார்கள். ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனேன். அதனால்தான் சுமார் 25 இலட்சம் இந்திய ரூபா கொடுத்து ஒக்டேவியாவை புக் செய்தேன். ஆனால், நான் ஒரு மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன்.

இந்த ஆக்டேவியாவோடு சேர்த்து இரண்டு கழுதைகளையும் வாங்க மறந்து விட்டேன்’’ என மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார். கார ணம், ஆக்டேவியா அடிக்கடி பிரேக் டவுன் ஆவதுதானாம். வாரத்துக்கு இரண்டு முறை இது பிரேக்டவுன் ஆகி வீதிகளில் நின்று, பெரிய அவஸ்தைக்குள்ளாகி விட்டாராம் இவர்.

இதனால், கடுப்பான அவர், மீண்டும் சர்வீஸ் சென்டருக்குச் சென்றார்; எப்படி? இரண்டு கழுதைகளை வாடகைக்கு வாங்கி, கயிறு மூலம் கழுதைகளை விட்டு ‘டோ’ பண்ணி, சர்வீஸ் சென்டருக்கு காரை இழுத்துச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்துத் திடுக்கிட்ட சர்வீஸ் அதிகாரிகள், பிரச்னையை மேலிடத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

‘‘பிரேக் பிடித்தால் லொரியில் இருந்து வருவதுபோல் ஏதோ புதுமையான சத்தமெல்லாம் வருகிறது. சர்வீஸ் சரியில்லை; வாரன்ட்டி தர மறுக்கிறார்கள்; இன்ஜின் சரியில்லை’’ என்று குறைகளாக அடுக்கிக் கொண்டே செல்கிறார் இவர்.

கார் நிறுவனம் விளக்கம்

இது பற்றி ஸ்கோடாவின் டெக்னிக்கல் டீமில் இருந்து இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘இந்த கஸ்டமர், காரின் இயல்பிலிருந்து மீறி ஏதோ மாடிஃபிகேஷன் செய்திருக்கிறார். அதனால்தான் இப்படிப்பட்ட பிரேக் டவுன்; டேமேஜ் எல்லாம். கம்பெனி சர்வீஸை மீறி ஆஃப்டர் மார்க்கெட் மூலம் அவர் காரில் கை வைத்ததால், எங்களால் வாரன்ட்டி தர இயலாது.

மேலும் அது எந்த மாதிரி தவறு என்பதைக் கண்டறியவும் முடியவில்லை. நாங்கள் எப்போதுமே கஸ்டமர் சர்விஸுக்குத்தான் முன்னுரிமை கொ டுப்போம். விரைவில் இவரது காரைத் திருப்தியாக சேர்வீஸ் செய்து தருவோம்!’’ என அறிக்கை விட்டிருக்கிறார்கள்.