விமானத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது ஹெட்போன் வெடித்து பெண் முகத்தில் தீக்காயம்!!

634

பெய்ஜிங்கிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்து, அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விமானப் பயணங்களின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தும், இந்தப் பெண் விமானத்தில் ஹெட்போன் மூலம் பாட்டுக்கேட்டுக் கொண்டு பயணித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதத்தில் நடந்துள்ள போதும், இந்த செய்தியை தற்போது தான் அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.

குறித்த பெண் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த போது பயங்கர சத்தத்துடன் ஹெட்ஃபோன் வெடித்துள்ளது. இதனால் அவர் முகத்தில் கடும் எரிச்சல் ஏற்பட்டு, தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனேயே ஹெட்போனைக் கழற்றி தரையில் வீசியுள்ளார்.

எவ்வாறாயினும், ஹெட்போன் வெடித்த சம்பவம் இதுவே முதல் முறை என அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹெட்போன் எரிந்ததால் ஏற்பட்ட பொசுங்கிய நாற்றத்துடனேயே பயணிக்க நேரிட்டுள்ளது. இதனால் பல பயணிகளுக்கு மூச்சுத்திணறலும் இருமலும் ஏற்பட்டதாக அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு கழகம் தெரிவித்துள்ளது