அடுத்த வரும் சில நாட்களுக்கு அடை மழை : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

511

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை நாளை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் மக்களை அவதானமான இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

மத்திய, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் காலி மாவட்டத்திலும் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெய்யும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் வடமேற்கு கரையோரங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பெய்த கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

மேலும் மத்திய மாகாணத்திலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதன் காரணமாக, குறிப்பாக நானுஓயா – கிளாரண்டன் மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.