தற்கொலைக்கு சென்றவரை சாமர்த்தியமாக பேசி காப்பாற்றிய இளைஞர் : குவியும் வாழ்த்துக்கள்!!

272

தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய ஒருவர் கடவுளாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான பொருட்களை உயரத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படும் 65 அடி உயரமுள்ள ஒரு கிரேன் இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் நபர் ஏறியவுடன், சம்பவ இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஃப்ஷால் ஜஃபர் என்ற இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உடனடியாக தானும் அந்த கிரேன் இயந்திரத்தின் மீது ஏறி, தங்கள் இருவருக்கும் பொதுவான மொழியான உருதுவில் அவருடன் உரையாடியுள்ளார்.

அதன் பின்னர், தற்கொலை எண்ணம் கொண்டிருந்த அந்நபர் கீழே இறங்க சம்மதித்துள்ளார். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கேண்டனீஸ் மொழியிலும் சரளமாக பேசும் பொலிஸ் கான்ஸ்டபிளான ஜஃபர், தனது பொலிஸ் பயிற்சி முறைகளை தான் பின்பற்றியதாக கூறினார்.

இது குறித்து ஆப்பிள் டெய்லி ஊடகத்திடம் கருத்து தெரிவித்த அவர் கூறுகையில், ”நாங்கள் பொலிஸ் அகாடமியில் கற்ற உத்திகளை நான் கையாண்டேன். கிரேன் இயந்திரத்தின் மீதேறிய நபரிடம் நான் தாய் மொழியில் பேசியதும், அவர் பாதுகாப்பாக உணர்ந்ததாக நினைக்கிறேன் ” என்று தெரிவித்தார்.

பொலிஸ் துறையில் ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு முன்பு பணியில் சேர்ந்த இந்த இளைஞர்தான், இம்மாவட்டத்தில் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட ஒரே பொலிஸ் அதிகாரி என அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவத்தினை தொடர்ந்து அவருக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அத்துடன் இந்த செயற்பாட்டின் பின்னர் 20 வயதான ஹாங்காங் நாட்டினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்புக்கு செல்ல