இரண்டு கால்கள் ஒன்றிணைந்து உயிருக்கு போராடி வரும் 10 மாத குழந்தை!!

351

தாய்லாந்தில் 10 மாத குழந்தை ஒன்று இரண்டுகால்கள் ஒன்றினைந்த நிலையில் உள்ளதால் அக்குழந்தைக்கு மேல் சிகிச்சை செய்வதற்கு போதுமான அளவு பணம் இல்லாமல் குடும்பத்தார் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Kananchaburi பகுதியில் பிறந்தவர் Jermkwan Krathumnat. இக்குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகிறது. தற்போது இக்குழந்தை அவரது பாட்டியின் வீட்டில் இருந்து வருகிறது.

Jermkwan Krathumnat சிரினோமோலியா என்ற நோயின் தாக்கத்துடனே பிறந்தார் என்று கூறப்படுகிறது.

இது ஒரு அரியவகை நோய் என்றும் குழந்தை கற்ப்பத்தில் இருக்கும் போதே கை அல்லது கால்கள் ஒன்றினைந்து காணப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது இதே போன்ற சுழ்நிலை தான் இக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என்றும், குழந்தைக்கு ஒரு பக்கம் கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் குழந்தையின் கால்கள் ஒன்றினைந்து காணப்படுவதால் அதற்கு உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே அதை நிவர்த்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

இதற்கு அதிக அளவு பணம் தேவைப்படும் என்றும் இதனால் தங்களால் இயன்ற உதவியை இவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என்று பின் என்பவர் சமூகவலைத்தளம் மூலம் உதவி கேட்டுள்ளார்.