வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞனுக்கு உதவி!!

553

 
சிதம்பரபுரத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் – தர்மசீலன் என்னும் காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச முடியாத இவ் இளைஞன் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள காது கேளாதோர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்கு பெற தெரிவாகியுள்ளார்.

குறித்த விசேட தேவைக்குட்பட்ட இளைஞனுக்கு தாயகத்திற்கான உதவித்திட்டத்தில் லண்டன் ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினரால் ஒரு இலட்சம் ரூபா உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு இன்று (16.03.2017) காலை 9.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர்கள் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன், தமிழ் வருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சமூக அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்புபட்ட செய்தி : வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ள விசேட தேவைக்குட்பட்ட இளைஞன்!!