மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மகன் ஈழப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். மறைந்த இயக்குனர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.
மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரகுவண்ணன்– அபி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமைதிப் படை 2 வெளியான பிறகு யூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த யூன் மாதத்தில்தான் மணிவண்ணன் மரணமடைந்தார்.
அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார். இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரகுவண்ணன்– அபி திருமணம் சென்னையில் நடந்தது.
நடிகர் சத்யராஜ் முன்நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகர் விவேக், ஆர்.கே செல்வமணி உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.