வவுனியாவில் வெள்ளைப்பச்சை அரிசிக்கு சிவப்புச் சாயம் : மாவட்ட செயலகத்தில் முறைப்பாடு!!

679

வெள்­ளைப் பச்சை அரி­சிக்­குச் சிவப்­புச் சாயம் சேர்க்­கப்­பட்டு சிவப்பு அரி­சி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என வவு­னியா மாவட்ட செய­ல­கத்­தில் பொது­ம­கன் ஒரு­வர் முறைப்­பாடு செய்துள்ளார்.

தனது முறைப்­பாட்­டின் உண்­மைத் தன்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக சோற்­றுச் சட்டியை அவர் மாவட்ட செய­ல­கத்­துக்­குக் கொண்டுவந்து மாவட்ட செய­ல­ரி­டம் காண்­பித்­தார். அது தொடர்­பாக விசாரித்தறிந்த மாவட்ட செய­லா­ளர் அந்த அரிசி மாதி­ரி­யைக் கொழும்­புக்கு அனுப்பி அறிக்கை பெறு­மாறு நுகர்­வோர் பாது­காப்பு அலு­வ­ல­ருக்கு உத்­த­ர­விட்­டார்.

கடந்த 2ம் திகதி வவு­னி­யா­வில் பிர­பல்­ய­மான வியா­பார நிலையத்தில் 5 கிலோ பச்சை அரி­சியை அந்­தப் பொது­ம­கன் கொள்­வ­னவு செய்­துள்­ளார்.

அரி­சி­யில் சந்­தே­கம் கொண்ட அவர் அது தொடர்­பாக நுகர்­வோர் பாது­காப்பு அதி­கார சபை­யி­ன­ருக்கு அறிவித்துள்ளார். அதற்­கு­ரிய சரி­யான பதில் நுகர்­வோர் பாது­காப்பு அதி­கார சபை­யி­ன­ரால் வழங்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நுகர்­வோர் பாது­காப்பு அதி­கார சபைக்­குச் சென்­ற­போது அங்கு அதி­காரி இல்லை என்று பதி­ல­ளிக்­கப்­பட்­டது என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.

நேற்று அந்த அரி­சி­யைச் சோறாக்­கி­ய­போது அதி­லி­ருந்து சிவப்­புச் சாயம் வெளிக்­கி­ளம்­பி­யது. அவர் சோற்­றுச் சட்டி சகி­தம் மாவட்ட செய­ல­கம் வந்து முறைப்­பாடு செய்­தார்.

மாவட்­ட­செ­ய­லா­ளர், மேல­திக மாவட்ட செய­லா­ளர், நுகர்­வோர் பாது­காப்பு அலு­வ­லர் ஆகி­யோர் விவ­ரங்­க­ளைக் கேட்­ட­றிந்­த­னர். மாவட்ட சுக­தார வைத்­திய அதி­கா­ரி­யின் பணி­ம­னை­யி­லுள்ள சுகாதாரப் பரிசோதகரும் முறைப்­பாடு பதிவு செய்­தார். அரிசி மாதிரி­யும் பெற்­றுக் கொள்­ளப்­பட்­டது.