வைத்திய ஆலோசனை இன்றி பாலியல் ஊக்க மருந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது பாலியல் பலவீனமுடையவர்களுக்கு வழங்கப்படும் மருந்து எனவும் சுகாதார ஆலோசனையின்றி பயன்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த மருந்தினை பயன்படுத்துவோர் பெண் வன்முறை மற்றும் பாலியல் வல்லுறவுகளுக்கு தள்ளப்படுவதாக தெரியவந்துள்ளதென சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
உயர் குருதி அழுத்தம் உடைய ஒருவர் இந்த மருந்தை பயன்படுத்தினால் மரணம் ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அனுமதி இன்றி குறித்த மருந்தை விற்பனை செய்யும் நிலையங்கள் குறித்து விசாரணை செய்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. .