16 விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை : சிக்கலில் பாதுகாப்பு அதிகாரி!!

251

விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாயை, விமானநிலைய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொண்டுள்ள சம்பவம் நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் மிகவும் நெரிசல் மிகுந்த விமான நிலையமாக கூறப்படும் ஒக்லாந்து சர்வதேச விமான நிலயத்திலுள்ள, ஓடுபாதைக்குள் நுழைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த குண்டு செயலிழக்க செய்யும் நாயால், 16 விமானங்கள் தாமதமடைந்ததால் குறித்த நாய் வேறு வழியின்றி சுட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நாயினால் புறப்பட்டு செல்ல வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 16 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் பாதிக்கப்பட்டன. விமான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்ததாழும், கரும் இருட்டில் தன்னை பிடிக்க முயன்றவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருந்ததாலும் குறித்த நாயை சுட்டதாக குறித்த விமானநிலைய பாதுகாப்புப்படை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கிறிஸ் என அழைக்கப்படும் குறித்த நாய், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் குண்டு செயலிழக்க செய்யும் பயிற்சியை நிறைவு செய்து பணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நாய் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளமைக்கு அந்நாட்டு மிருக நல ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, குறித்த நேரத்தில் மயக்க மருந்தூட்டி நாயை மீட்டிருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என, குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.