லலித் மோடிக்கு வாழ்நாள் தடை!!

414

modi

டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததையடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் பணத்தில் முறைகேடு செய்த லலித் மோடிக்கு நாளை வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த 2008ல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது தலைவராக இருந்தவர் லலித் மோடி. இந்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதால் மூன்றாவது ஆண்டு ஐ.பி.எல் தொடர் (2010) முடிந்தவுடன் இவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவரை நீக்கியது.

தற்போது லண்டனில் வசிக்கும் இவரது ஊழல் குறித்து விசாரித்த 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பி.சி.சி.ஐயிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க இன்று பொதுக்குழு கூட்டத்துக்கு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்தது.



இதை நடத்தக் கூடாது என்று கடந்த 21ம் திகதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தடை பெற்றார் மோடி. இதனிடையே, பொதுக்குழுவை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி தந்தது.

இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் தலைமையில் சென்னையில் நாளை பொதுக்குழு கூடுகிறது. இதில் லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கபடும் எனத் தெரிகிறது.

மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு (21) இருக்கும் பட்சத்தில் மோடியின் தடை உறுதியாகும்.