உறைபனியினால் முற்றாக மூடப்பட்ட வீடு!!

265

 
அமெ­ரிக்­கா­வி­லுள்ள வீடொன்று உறை­ப­னி­யினால் முற்­றாக மூடப்பட்­டி­ருப்­பதை புகைப்­படக் கலைஞர் ஒருவர் படம்­பி­டித்­துள்ளார். நியூ யோர்க் மாநி­லத்தில் ஒன்­ட­ரியோ ஏரிக்கு அருகில் இவ்­வீடு உள்­ளது.

கடும் குளி­ரான கால­நி­லைக்கு மத்­தியில் இந்த வீட்டை முற்­றிலும் உறை­பனி மூடி­யி­ருந்­தது. கடந்த வாரம் இவ்­வீட்டை படம்­பி­டித்த ஜோன் குக்கோ இது தொடர்­பாக கூறு­கையில், இப்­படம் உண்­மை­யா­னது என நம்­பு­வ­தற்கு சமூக வலைத்­த­ளங்­க­ளி­லுள்ள பலர் மறுக்­கின்­றனர்.

நான் முழு வீட்டின் மீதும் ஏதோ நுரையை தெளித்­து­விட்டேன் என அவர்கள் கரு­து­கின்­றனர். எனத் தெரி­வித்­துள்ளார்.

நியூயோர்க் மாநி­லத்தின் மேற்குப் பகு­தியில் கடந்த வாரம் பனிப்­புயல் கார­ண­மாக 200,000 பேர் மின்­சா­ரத்தை இழந்­தி­ருந்­தனர். இவ்­வார முற்பகுதியிலும் பல்லாயிரக் கணக்கானோருக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.