பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான அனைத்து தகுதிகள் இருந்த போதிலும், மாணவி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போயுள்ளது.
தெஹிஅத்தகண்டிய, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த ஹசினி சந்தமாலி விஜேரத்ன என மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
குறித்த மாணவி கலைபிரிவில் உயர்தரம் பரீட்சை எழுதியுள்ள நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான தகுதியையும் பெற்றுள்ளார்.
எனினும் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்காக சமர்ப்பித்த விண்ணப்ப பத்திரத்தில் காணப்பட்ட சிறிய குறைப்பாடுகள் காரணமாக அவர் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
“நான் இணையம் ஊடாக அனுப்பி வைத்த விணப்ப பத்திரத்தில் இரண்டாம் பக்கம் காணப்படவில்லை என எனக்கு கடிதம் ஒன்று பல்கலைக்கழக ஆணைக்குழுவிடம் இருந்து கிடைத்தது.
மீளவும் பிழைகளை சரிபார்த்து 7 நாட்களுக்குள் மீண்டும் அனுப்பி வைக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், கடிதம் 6வது நாளே எனக்கு கிடைத்ததது.
நான் மீண்டும் ஒரு நாளுக்குள் பிழைகளை திருத்தி விண்ணப்பத்திரத்தை அனுப்பி வைத்தேன். எனினும் இம்முறை அந்த விண்ணப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது.
நான் கொழும்பிற்கு நேரடியாக சென்று இதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டு வந்தேன். எனினும் சில காலங்களின் பின்னர் எந்த விண்ணப்பத்தை ஆராய்ந்து பார்க்க முடியாதென கடிதம் ஒன்று வந்தது.
தொழில்நுட்பத்தின் பிழை காரணமாக ஏற்பட்ட இந்த தவறை மன்னித்து மீண்டும் தனக்கு பல்கலைக்கழத்திற்கு செல்லும் வாய்ப்பை வழங்குமாறு குறித்த மாணவி கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.