கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவரினால் அதிவேகமாக செலுத்தப்பட்ட மொண்டெரோ ரக காரொன்று கறுவாத்தோட்டம் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது குறித்த காரி னுள் பாடசாலை மாணவர்கள் 10 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பின் பிரபல பாடசாலையின் வருடாந்த கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலமொன்றில் கலந்து கொண்ட காரொன்றே இவ்வாறு விபத்துக்கு ள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.






