நபர் ஒருவர் தனது குதத்தில் உயிருள்ள இரு மீன்களை நுழைத்துக் கொண்டதையடுத்து, அம் மீன்கள் அந் நபரின் குடலுக்குள் ஊடுருவிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
45 வயதான இந் நபர், அதிக மதுபோதையில் இருந்தவேளையில், இரு சிறிய மீன்களை தனது குதத்தில் நுழைத்துக்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிருடனிருந்த மேற்படி மீன்களில் ஒன்று, அந் நபரின் குடலை சென்றடைந்தது. இதனால் கடுமையான வயிற்றுவலியினால் பாதிக்கப்பட்ட மேற்படி நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சீனாவின் தென் பிராந்தியத்திலுள்ள குவாங்ஸோ நகரிலுள்ள வைத்தியசாலையொன்றின் வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் மேற்படி மீன்களை அந் நபரின் வயிற்றிலிருந்து அகற்றினர்.
24 மணித்தியாலங்களுக்கு மேலாக மேற்படி மீன்கள் அந் நபரின் வயிற்றுக்குள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இம் மீன்களில் ஒன்று 4 அங்குல நீளமும் 0.8 அங்குல அகலமும் உடையது என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இம் மீன்கள் வேறு உறுப்புக்களை அடைந்திருந்தால் அந் நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அம் மருத்துவர் கூறியுள்ளார்.







