அஸ்வின், மனைவி விபத்தில் சதியா : கருகிய கார் ஆய்வு!!

644

கார்பந்தய வீரர் அஸ்வினின் கார்  விபத்துக்குள்ளானதில் அஸ்வின் தனது மனைவியுடன் உயிரிழந்தார்.

இதுகுறித்து கருகிப் போன அவரது காரை பிரத்தி​யேக ஆய்வு செய்ய பொலிஸார் முடிவு செய்துள்ளனர். விபத்தில் சதி ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த அஸ்வின் சுந்தர், 2 இருக்கைகள் கொண்ட பி.எம்.டபிள்யு சொகுசு காரில் மனைவி நிவேதாவுடன் நேற்று முன்தினம் இரவு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நண்பர் ஒருவரின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் இரவு விருந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் தனது மனைவியுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சென்னை அடையாறு அடுத்துள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் சாலை ஓரம் இருந்த உள்ள மரத்தில் வேகமாக மோதியது. இதில் அப்பளம் போல் நொறுங்கிய கார் தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த அஸ்வின் சுந்தர் மற்றும் நிவேதா ஆகியோர் சிக்கிக் கொண்டனர். தீப்பிடித்த நொடி பொழுதில் கார் முழுவதும் தீப்பற்றியது.

20 அடி தூரத்துக்கு தீ

கார் தீப்பிடித்து எரியும் போது 20 அடி தூரத்திற்கு யாரும் நெருங்க முடியாத அளவிற்கு தீயின் தாக்கம் இருந்தது. உடனடியாக தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

எலும்புக்கூடான தம்பதி

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அஸ்வின் சுந்தர், நிவேதா ஆகியோரின் உடல்களை எலும்புக்கூடாக மீட்டு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

நைட்ரஸ் ஆக்ஸைடு பயன்பாடு?

விசாரணையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. நைட்ரஸ் ஆக்சைடு சிஸ்டம் என்பது, இன்ஜினில் பெட்ரோல் மற்றும் காற்று கலவையுடன் எரியும் போது அதிவேகத்திற்காக நைட்ரஸ் ஆக்சைடு பயன்படும். அதாவது, கார் கிளப்பியதும் அடுத்த நொடிகளில் வாகனம் அதி வேகமாக செல்லும் என கூறப்படுகிறது.

இதனால் பந்தய வீரர்கள் தங்கள் காரில் நைட்ரஸ் ஆக்சைடு சிஸ்டத்தை பயன்படுத்துவது வழக்கம். இந்தநிலையில் அஸ்வின் சுந்தர் தேசிய அளவில் கார் பந்தய வீரர் என்பதால், அவர் தனது காரில் அதிக வேகத்திற்காக நைட்ரஸ் ஆக்சைடு சிஸ்டத்தை பொருத்தியிருக்க வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

நொடிகளில் தீ பரவாது ஏன்னெனில் அஸ்வின் ரேஸ் பைக்கில் கூட நைட்ரஸ் ஆக்சைடு சிஸ்டத்தை பயன்படுத்தி இயக்கி இருக்க வாய்ப்பு இருக்கலாம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

ஒரு வாகனம் விபத்து ஏற்படும் போது தீப்பிடிப்பது வழக்கம், ஆனால் இதுபோன்று நொடிகளில் பயங்கர தீ பரவாது என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரத்யேக ஆய்வுக்கு முடிவு இதனால் பொலிஸாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. எனவே விபத்தில் கருகிய சொகுசு காரை பிரத்யேக ஆய்வு செய்ய பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பி.எம்.டபிள்யு நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுநர்களிடமும் சந்தேகங்களை கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சதி ஏதேனும் நடந்திருக்கிறதா?

காரை முழுமையாக ஆய்வு செய்த பிறகே விபத்தின் முழு விவரமும் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஸ்வின் சுந்தர் சர்வதேச கார் பந்தய வீரர் என்பதால் விபத்தில் சதி ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.