இணையத்தளங்களை முடக்கும் எண்ணிக்கை 32 சதவீதமாக உயர்வு : கூகுள் தகவல்!!

223

முடக்கப்படும் இணையதளங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 32 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூகிள் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இது சற்று ஆறுதலான விடயம் என்றே கூகிள் குறிப்பிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத இணையதளங்களே அதிகமாக முடக்கப்படுவதால், இந்த உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.

இணையதளங்கள் முடக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு பாதுகாப்பு சமிக்ஞைகளை தாம் வெளியிடுவதாகக் கூறியுள்ள கூகிள், என்றபோதும் கூகிளால் அங்கீகரிக்கப்படாத தளங்கள் மிகையாக இருப்பதனால், முடக்கப்பட்ட சுமார் 61 சதவீதமான இணையதளங்களுக்கு தாம் சமிக்ஞைகள் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது.

யாஹூ, அமெரிக்க அரச இணையதளங்கள் மற்றும் பிரபல இணைய வர்த்தகத் தளங்கள் முடக்கப்பட்டு வருவதையடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவலை கூகிள் வெளியிட்டுள்ளது.

இணையதளங்களை முடக்குவது அதிகரித்து வருகின்றபோதிலும், தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டே வருகின்றன என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.