சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் காலை உணவு!!

540

எம்மில் பலர் தற்போது சந்திக்கும் போது பசியாறிட்டீங்களா? என்று கேட்பதற்கு முன் சுகர் எவ்வளவு இருக்கிறது? என்று கேட்கிறார்கள். அந்தளவிற்கு தென்னாசியா முழுவதிற்கும் சர்க்கரை நோய் பரவியிருக்கிறது. இன்றைய திகதியில் 380 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதிலும் டைப் 2 டயபடீக்கால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் 2035 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இருமடங்காகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இதனிடையே காலை உணவை அதிலும் சத்தான காலை உணவை சாப்பிட்டால் ,டைப் 2 எனப்படும் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களை காணலாம்.

காலை உணவை தவிர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள் என்பதற்காக சத்தில்லாத உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவை எடுத்துக் கொள்ளவேண்டாம். அதாவது அதிக கொழுப்புள்ள உணவு, சோடா போன்ற பானம், இரவில் அதிகமாக சாப்பிடுவது, இனிப்பு பண்டங்களை சாப்பிடுவது, உடல் எடையைப் பற்றி கவலைப்படாமல் சாப்பிடுகிறார்கள். இதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். இதற்கு மாற்றாக சத்துள்ள கால உணவை சாப்பிடவேண்டும்.

பார்லி கஞ்சி, காய்கறி சூப், ராகி ஊத்தப்பம், பழுப்பு அரிசி மற்றும் பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.இவற்றைச் சாப்பிடும் போது உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது. அத்துடன் டைப் 2 நோயை கட்டுப்படுத்தும் காரணிகள் இதில் உள்ளதால் இதனை தொடர்ந்து காலையில் சாப்பிடும் போது சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. அதனால் காலை உணவை தவிர்க்காதீர்கள். அதன் பிறகு சத்தான உணவை சாப்பிடுங்கள். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்