கணவனை இழந்த பெண்ணுக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்த திலகரட்ண தில்ஷான்!!

271

 
மாத்­தளை, அக­ல­வத்தை பிர­தே­சத்தை சேர்ந்த, கண­வனை இழந்த நிர்­மலா பத்­ம­கு­மாரி மெனிக்கே என்ற பெண்­ணுக்கு இலங்­கையின் கிரிக்கெட் நட்­சத்­திரம் தில­க­ரட்ண தில்ஷான் தனது சொந்த செலவில் வீடொன்றை நிர்­மா­ணித்­து­க் கொ­டுத்­துள்ளார்.

இப்­ பெண்ணின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் மின்­சார தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­தி­ருந்தார். இந்தப் பெண்­ணுக்கு 11 மற்றும் 7 வய­துகள் கொண்ட இரு பெண் பிள்­ளைகள் உள்ளனர்.

தனது கணவன் உயி­ரி­ழந்­ததன் பின்னர் இரு பிள்­ளை­களின் எதிர்­கா­லத்­தை­க் கருத்­திற்­கொண்டு குடி­யி­ருந்த வீட்டின் காணி உறு­தியை அடகு வைத்து இப் பெண் ஐந்­தரை இலட்சம் ரூபா கட­னாக பெற்­றி­ருந்தார்.

இந்தநிலையில் கட­னாகப் பெற்ற பணத்தை செலுத்த முடி­யாமல் போன­மை­யினால் தனது வீட்டை இழக்கும் நிலை­மையை எதிர்­நோக்­கி­யி­ருந்­துள்ளார்.

இவ்­ வி­டயம் தொடர்பில் கேள்­வி­யுற்ற மாத்­த­றை­யி­லுள்ள கோடீஸ்­வர வர்த்­த­க­ரான விதா­ன­ஆ­ரச்சி மாத்­த­ளைக்கு சென்று குறித்த வீட்டின் மீதான கடனை செலுத்தி வீட்டை கட­னி­லி­ருந்து மீட்டுக் கொடுத்­துள்ளார்.

இதே­வேளை இவ்­ வி­ட­யத்தை அறிந்த இலங்கை கிரிக்கெட் வீரர் திலக்­க­ரட்ண தில்ஷான், தனது சொந்த செலவில் அப் ­பெண்­ணுக்கு வீடு ஒன்றை நிர்­மா­ணித்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார்.

தனது பழைய வீட்டை வர்த்­த­கரின் உத­வி­யுடன் நிர்­மலா மீட்­டி­ரு­ந்தி­ருந்த நிலையில் தான் அளித்த வாக்­கு­று­திக்­க­மைய அப்­ பெண்­ணுக்கும் அவ­ரது இரு­பிள்­ளை­க­ளுக்கும் தில்ஷான் வீடு ஒன்றை நிர்மாணித்து கையளித்திருந்ததுடன் நேற்று முன்தினம் அவ் வீட்டை யும் திறந்து வைத்தார்.