நீர்வீழ்ச்சியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 18 மாணவர்கள் உட்பட 20 பேர் பலி!!

285

 
கானாவில் நீர்­வீழ்ச்சி ஒன்றில் மர­மொன்று முறிந்து வீழ்ந்­ததில் 20 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கானாவின் கின்­டம்போ பகு­தி­யி­லுள்ள பிர­சித்தி பெற்ற நீர்­வீழ்ச்­சி­யி­லேயே நேற்று முன்­தினம் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

நீர்­வீழ்ச்­சியில் நீராடிக் கொண்­டி­ருந்­த­போது ஏற்­பட்ட புயல் கார­ண­மாக குறித்த மரம் முறிந்து வீழ்ந்­துள்­ளதால் இந்த உயி­ரி­ழப்பு இடம்­பெற்­றுள்­ள­தாக மீட்புப் படை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் கானாவின் தேசிய தீய­ணைப்புப் படையின் பேச்­சாளர் பிரின்ஸ் பில்லி அநக்லேட், இது வழ­மைக்கு மாறான ஒரு சம்­ப­வ­மாகும் என தெரி­வித்­துள்ளார். சரிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஒருங்­கி­ணைந்த பொலிஸ் பிரி­வினர் மற்றும் தீய­ணைப்புப் படை­யினர் ஈடு­பட்­டுள்­ளனர்.

பாரிய மர­மொன்று மலையோடு சேர்ந்து சரிந்து வீழ்ந்­தது என சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒருவர் தெரி­வித்­துள்ளார். இதன்­போது உயி­ரி­ழந்­த­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் வென்ச்சி உயர் பாட­சா­லையைச் சேர்ந்த மாண­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஏனை­ய­வர்கள் சுற்­றுலாப் பய­ணி­க­ளாவர்.

மேலும் தீய­ணைப்புப் படை பேச்­சாளர் அநக்லேட், 18 மாண­வர்கள் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­தா­கவும் ஏனைய இருவர் வைத்­தி­ய­சா­லையில் வைத்து உயி­ரி­ழந்­த­தா­கவும் ஏ.எவ்.பி. க்கு தெரி­வித்­துள்ளார்.
காய­ம­டைந்த 20 பேரும் கின்­டம்போ பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கானாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் கதெரின் அபெலெமா அபெகு தெரிவித்துள்ளார்.