6 வயதுச் சிறுவனுக்கு இப்படி ஒரு நிலைமையா : நீதிபதிகள் வருத்தம்!!

228

பல சட்டங்கள் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு நீதி கிடைக்காதது துரதிருஷ்டம் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு தனது ஆறு மாதக் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.

அதன் பின்னர் ஊசிப்போட்ட இடத்தில் சிறிய ரத்தக்கட்டு உருவானது. இது நாளைடைவில் சரியாகி விடும் என்று அவர்கள் கருதியுள்ளனர்.

ஆனால், கட்டி பெரிதாக வளர்ந்து வந்துள்ளது. தற்போது, சிறுவனுக்கு 6 வயதாகும் நிலையில், ரத்தக் கட்டி 3 கிலோ எடையில் புற்றுநோய் கட்டியாக மாறியுள்ளது.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதால் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை அளிப்பது குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும்.

சிறுவனை புற்று நோய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறுவனுடன் பெற்றொர் தங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், பல சட்டங்கள் இருந்தும் சிறுவனுக்கு நீதி கிடைக்காதது துரதிருஷ்டம் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.