நடிகர் சங்கத் தலைவர் ஆகிறார் நாசர் : இளம் நடிகர்கள் ஆதரவு!!

652

nasar

நடிகர் சங்கப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நடிகர் சங்கத்தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நாசர் பின்னால் விஷால் குருப் அணிவகுத்து நின்றது. பொதுக்குழுவில் விஷால், சூர்யா, கார்த்தி, ஆர்யா, சந்தானம், ஜெயம் ரவி, ஜீவா, நிதின்சத்யா, ஆகிய இளம் ஹீரோக்களுடன் சிவகுமார், நாசர், எஸ்.வி.சேகர், பொன்வண்ணன் ஆகியோர் ஒரு குழுவாக இருந்தனர்.

இளம் ஹீரோக்கள் அனைவரும் வெள்ளைச் சட்டை, நீலநிற ஜீன்ஸ் அணிந்து வந்தனர். எனவே இவர்களை நீலப்படை என்றே வர்ணித்தனர். இவர்கள் அனைவரும் தி.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கூடி 33 கேள்விகளை தயார் செய்து வந்தனராம்.



சரத்குமாரிடம் விஷால், ஜீவா, நாசர் மூவரும் 33 கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல மூச்சு திணறிப் போகும் அளவுக்கு சரத்குமார் குழு சோர்வடைந்தனர். புதிதாக வாங்கப்பட்ட ப்ளாட் நடிகர் சங்கம் பெயரில் வாங்காமல் தலைவர், பொதுச்செயலாளர், பெயரில் ஏன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ஜீவா கேள்வி கேட்கவே, இவர்களைத் தொடர்ந்து பேசிய நாசர், நீங்கள் தவறு செய்திருப்பதால்தானே நீதிபதி இதற்கு தடை ஆணை பிறப்பித்துள்ளார் என்று கேட்டார்.

இவர்களை அடுத்துப் பேசிய ராதிகா அழுதே விட்டாராம். தலைவர் பதவிக்குப் போட்டி போட வேண்டாம் என்று என் கணவரை சொன்னேன். ரவிதான் என்னை சமாதானம் செய்து இந்த முறை என் கணவரை நடிகர் சங்கத்தலைவர் ஆக்கினார். நடிகர் சங்கப் பிரச்சினையில் என் கணவர் என்னென்ன செய்திருக்கிறார் என்று தெரியும் என்று பட்டியலிட்டாராம் ராதிகா.

அதற்குப் பிறகுதான் இளைஞர்களுக்கு வழிவிடுவதாகச் சொன்னார்களாம்.அதனாலேயோ என்னவோ விஷால் குரூப் நாசரைத் தலைவராக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த 21ம் திகதி நேரு ஸ்டேடியத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவிலும் நாசர் எங்கே சென்றாலும் அவர் பின்னாலேயே சூர்யா, கார்த்தி,விஷால்,ஜெயம்ரவி, ஆர்யா என்று நட்சத்திர பட்டாளமே அணிவகுத்து சென்றது.

அடுத்து நடக்கும் நடிகர்சங்க தேர்தலில் இந்த இளம்படை நாசரைத் தலைவராக்க முடிவுசெய்து இருக்கிறதாம்.