அரிய வகை வண்ணத்துப்பூச்சிகளை பிடித்தமை மற்றும் கொன்றமை தொடர்பான வழக்கில் பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
57 வயதான பிலிப் குலென் எனும் இந் நபர், லார்ஜ் புளூ (Large Blue) எனும் வண்ணத்துப்பூச்சிகளை பிடித்துக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
லார்ஜ் புளூ இன வண்ணத்துப்பூச்சிகள், 1795 ஆம் ஆண்டில் பிரிட்டனில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டன. 1979 இல் பிரிட்டனில் இவ்வினம் அழிந்தது.
எனினும், 1983 ஆம் ஆண்டு பல லார்ஜ் புளூ வண்ணத்துப்பூச்சிகள் பிரிட்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு மீண்டும் அவ் வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் வண்ணத்துப் பூச்சிகளை பிலிப் குலென் பிடித்து கொன்று விற்பனை செய்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என பிரிஸ்டல் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.






