வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!!

265


abuse

வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதான சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சிறுமி மூன்று பேர் கொண்ட குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வான் ஒன்றில் சென்ற மூவர் சிறுமியை கடத்திச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர்கள் மீண்டும் வவுனியாவின் நகர்ப் பகுதி ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.சிறுமிக்கு நடந்த சம்பவத்தை அறிந்த பிரதேசவாசிகள் சிறுமியை வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.