பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணிகள் மத்­தியில் பாம்பு!!

311

 
பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் பாம்­பொன்றைக் கண்டு பய­ணிகள் திடுக்கிட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்றுள்­ளது.

கடந்த ஞாயி­றன்று, அமெ­ரிக்­காவின் அலஸ்கா மாநி­லத்தின் அனியெக் நக­ரி­லி­ருந்து அம்­ மா­நி­லத்தின் மிகப் பெரிய நக­ரான அன்­க­ரேஜே நோக்கி ரவ்ன் அலஸ்கா நிறு­வன விமா­ன­மொன்று பறந்து கொண்­டி­ருந்­தது.

அப்­போது, விமானி பய­ணி­க­ளிடம் வந்து, இவ்­ வி­மா­னத்­துக்குள் பாம்­பொன்று உள்­ளது. ஆனால், அது எங்­கி­ருக்­கி­றது என்­பது தெரி­ய­வில்லை என்றார்.

அவ்­ வே­ளையில், விமா­னத்தின் பின்­புறப் பகு­தியில், பாம்பு ஒன்று கிடப்­பதைக் கண்டு, அரு­கி­லி­ருந்த தனது தாயா­ரிடம் “அங்கே பாருங்கள்,.. என்ன அது” என்று கேட்டான்.

தனது மகன், சுட்­டிக்­காட்­டிய பகு­தியை பார்த்த மேற்­படி பெண், பாம்­பொன்று கிடப்­பதை உறு­திப்­ப­டுத்­தினார்.

அப்­ பாம்பின் ஒரு பகுதி பை ஒன்­றினால் மூடப்­பட்­டி­ருந்­தது. எனினும், விமா­னத்­துக்குள் பெரும் பீதி ஏற்­ப­ட­வில்லை. அப்­ பாம்பு விஷ­மற்­றது என்­பதும் உறங்கிக் கொண்­டி­ருப்­பதும் தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து, விமா­னத்தின் ஊழியர் ஒரு­வரும், விமா­னியும் இணைந்து அப்­ பாம்பை பை ஒன்­றுக்குள் போட்­டனர்.

அதன்பின் ஆச­னங்­க­ளுக்கு மேலா­க­வுள்ள பொதிகள் வைக்கும் பகு­தியில் மேற்­படி பாம்பு வைக்­கப்­பட்­டது. இப்­ பாம்பு சுமார் 5 அடி நீள­மா­ன­தாக காணப்­பட்­டது.

இப் ­பாம்பை விமா­னத்தின் முன்னைய பய­ணத்­தின்­போது, அதா­வது அன்­கரேஜ் நக­ரி­லி­ருந்து அனியக் நக­ருக்கு பயணி ஒருவர் எடுத்து வந்­துள்­ள­தா­கவும் ஆனால், அவர் இறங்­கும்­போது பாம்பை தன்­னுடன் எடுத்துச் செல்­ல­வில்லை எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி பயணி தன்­னுடன் பாம்பை எடுத்துச் செல்­வ­தற்குப் பதிவு செய்­தி­ருக்­க­வில்லை. ஆனால், அவர் அனியக் நகரில் வந்­தி­றங்­கிய பின்னர் தனது பாம்பை காண­வில்லை எனவும் அது விமா­னத்தில் இருக்­கலாம் எனவும் தெரி­வித்தார் என விமான நிறு­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் கூறினார்.