நண்பனின் பிறந்த நாளை பாடசாலையில் மது அருந்தி கொண்டாடிய 8 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

372

மிஹிந்­தலை நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் மாண­வர்கள் மது­பானம் அருந்தி அதி­க போதை­ய­டைந்த நிலையில் மிஹிந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கப்பட்­டுள்­ளனர்.

இப்­பா­ட­சா­லையின் 11 ஆம் தரத்தில் கல்­வி­ ப­யிலும் மாண­வர்கள் இவ்­வாறு மது­பானம் அருந்­தி­யுள்­ளனர். அவ்­ வ­குப்பில் கற்­று­வரும் மாணவர் ஒரு­வரின் பிறந்த தினத்தை முன்­னிட்டு இம்­ மா­ண­வர்கள் எட்டு பேரும் நேற்றுமுன்தினம் காலை 6. 30 மணி­ய­ளவில் பாட­சா­லை­யி­லுள்ள ஆசி­ரியர் விடு­தியின் அறையில் வைத்து மது­பானம் அருந்­தி­யுள்­ளனர்.

இந்த ஆசி­ரியர் விடுதி நீண்­ட­கா­ல­மாக ஆசி­ரி­யர்­களின் பயன்­பாட்டில் இல்­லா­தி­ருந்­த­மை­யினால் பாட­சாலை நிர்­வாகம் அதனை மாண­வர்­களின் பயன்­பாட்­டுக்கு அனு­ம­தித்­தி­ருந்­தது. இதனை சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்ட இம் ­மா­ண­வர்கள் மது­பான போத்­த­லொன்­றினை கொண்­டு­வந்து ஆசி­ரி­யர்கள் எவரும் வரு­வ­தற்குள் அதனை அருந்­தி­யுள்­ளனர்.

இம்­ மா­ண­வர்கள் மது­பானம் அருந்­து­வதைக் கண்ட அப் ­பா­ட­சா­லையின் மாண­வர்கள் சிலர் ஆசி­ரியர் மற்றும் அதி­ப­ருக்கு அறி­வித்­துள்­ளனர். எனினும் ஆசி­ரி­யர்கள் அவ்­வி­டத்­துக்கு சென்று பார்த்­த­போது மது அருந்­திய மாண­வர்கள் அங்­கி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருந்த போதிலும், பின்னர் அவர்கள் பாட­சாலை வளா­கத்­தினுள் போதையில் காணப்­பட்ட நிலையில் அவர்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­துடன் மிஹிந்­தலை பொலி­ஸா­ருக்கும் அறி­வித்­துள்­ளனர்.

அதிக போதையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மது­பான போத்தல், மென்­பான போத்தல் மற்றும் நொருக்கு தீணிகள் (பைட்ஸ்) என்­ப­வற்­றினை குறித்த மாண­வர்கள் பாட­சாலை வளா­கத்­தினுள் கொண்டு வந்­துள்ள நிலையில் பாட­சா­லைக்கு ஆசி­ரி­யர்கள் வரு­வ­தற்கு முன்­பாக இச்­சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்த கார­ணத்­தினால் அதனை தடுக்க முடி­யாமல் போயுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­ மா­ண­வர்கள் போமையில் இருப்­ப­தனை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக அவர்கள் மிஹிந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எட்டு மாணவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாடி குறித்த மாணவர்கள் மீது தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.