வவுனியாவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

326

 
வவுனியா கோவில்புதுக்குளம் இந்துக்கல்லூரி சரஸ்வதி மண்டபத்தில் வறிய பாடசாலை மாணவர்கள், பெண்தலைமை தாங்கும் குடும்பங்களின் 2017ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், கைநூல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (23.03.2017) மாலை 3.30 மணியளவில் பாடசாலை அதிபர் அ. பூலோகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் அனுசரனையில் ஆயர் பி.எம்.இராஜசிங்கத்தினால் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள், பின்தங்கிய வறிய மாணவர்களைத் தெரிவு செய்து 110 மாணவர்களுக்கு 2017ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கைநூல்கள், கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வழகே, சிறப்பு விருந்தினராக வன்னி பிராந்திய சமூதாயப்பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்த்தன, மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல், கைநூல்களை வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.