இரண்டாவது தடவையும் பரீட்சையில் ஏற்பட்ட தோல்வி : மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

541

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இந்தவாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஹோமாகம கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் சலனி என்ற மாணவி கணித பாடத்தில் S சித்தி பெற்றமையினால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த மாணவி 2015ம் ஆண்டு முதன் முறையாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதியுள்ளார். எனினும் பரீட்சையில் சாதாரண சித்தியடைந்து ஹோமாகம மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். எனினும் அவருக்கு வர்த்தக பிரிவில் உயர்தரம் கற்க வேண்டும் என்பதே கனவாகியுள்ளது.

இதனால் அவர் மீண்டும் 2016ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதி பல கனவுகளுடன் முடிவுகளுக்கு காத்திருந்தார்.

எனினும் நேற்று முன்தினம் 12.30 மணியளவில் பரீட்சை முடிவுகளை பார்த்த குறித்த மாணவி, மாலை 7.30 மணியளவில் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

வர்த்தக பிரிவில் உயர்தரம் கற்பதற்கு போதுமான பெறுபேறுகள் இல்லாமையினாலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.