சினிமாவில் என்னுடைய ரோல்மாடல் ஜோதிகா : லட்சுமிமேனன்!!

629

laxmi menon

தமிழ் சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஜோதிகா, சிம்ரன் ஆகியோர்தான் ரோல் மாடலாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது கும்கி நாயகி லட்சுமிமேனன் தன்னுடைய ரோல்மாடலாக ஜோதிகாவைத்தான் நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

காக்க காக்க, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் ஜோதிகாவின் நடிப்பு இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அப்படங்களை பல தடவை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறாராம். விஷாலுடன் பாண்டியநாடு படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் லட்சுமி மேனன் கூறும்போது..

தற்போது 11ம் வகுப்பு படித்துவரும் நான் பாண்டிய நாடு படத்தில் டீச்சராக நடிக்கிறேன். எனது உடல் அமைப்பு அதற்கு பொருந்தியதால் இந்த வேடத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக எனக்கு பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த சில ஆசிரியர்களை ரோல்மாடலாக எடுத்துக் கொண்டாலும் காக்க காக்க படத்தில் ஜோதிகா நடித்த பாணியில்தான் நடித்தேன்.



இப்படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு காக்க காக்க ஜோதிகா போல இருப்பதாக சொல்கிறார்கள். இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ஜோதிகா போன்று ஒரு நடிகையாக சினிமாவில் வலம் வரவேண்டும் என்ற ஆசையுடன் தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று அவர் கூறினார்.