இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு இரண்டு சர்வதேச கிரிக்கெட் விருதுகள்!!

418

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் 2016ம் வரு­டத்­திற்­கான அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான சேர் கார்வீல்ட் சோபர்ஸ் விருதை இந்­தி­யாவின் ரவிச்­சந்­திரன் அஷ்வின் பெற்­றுக்­கொண்டார்.

இந்­தி­யா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான கடைசி டெஸ்ட் போட்டி முடிவில் இந்த விருதை இந்­திய உலக சம்­பியன் (1983) அணித் தலைவர் கபில் தேவ் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக வழங்­கினார்.

இந்த விரு­துடன் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் அதி சிறந்த டெஸ்ட் வீர­ருக்­கான விரு­தையும் அஷ்வின் பெற்­றுக்­கொண்டார். இந்த விருதை சுனில் காவஸ்கர் வழங்கினார்.