இசையமைப்பாளராகும் பிளாக் பாண்டி!!

422

pandi

சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாண்டி. இவரை பிளாக் பாண்டி என்றே சினிமா உலகில் அழைக்கின்றனர். கில்லி, அங்காடித் தெரு, தெய்வத்திருமகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் பாண்டி தற்போது வணக்கம் சென்னை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வரும் பாண்டி, இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இசை கற்றிருக்கிறேன். சில குறும்படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறேன். டி.வி.யில் நடித்துக் கொண்டிருந்த நான் இப்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்கிறேன். இதற்கிடையில் ஒலிப்பதிவு ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி இருக்கிறேன்.

இசையில் அதிக ஆர்வம் உள்ளதால் விரைவில் புதிய படமொன்றுக்கு இசை அமைக்க உள்ளேன். நடிப்பு, இசை இரண்டிலும் கவனம் செலுத்துவேன். வருகிற டிசம்பர் 1ம் திகதி நான் காதலிக்கும் உமேஸ்வரி பத்மினியை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். என்று அவர் கூறினார்.