சாத­ரண தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்கள் உயர்­த­ரத்தில் கல்வி கற்­ப­தற்குச் சந்­தர்ப்பம்!!

985

கல்விப் பொதுத் தரா­தர சாத­ரண தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்­க­ளுக்கும் உயர்­த­ரத்தில் கல்வி கற்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­க­வுள்­ள­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது. இவ்­ வே­லைத்­திட்­டத்­துக்­க­மை­வாக 26 புதிய கற்கை நெறி பிரி­வுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள வோட்டர் எட்ஜ் ஹோட்­டலில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், கடந்த காலங்­களில் கல்வி பொதுத் தரா­தர சாதா­ரண தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்கள் தங்­க­ளது பாட­சாலை கல்­வியை கைவிட்டு சிறு தொழில் செய்யும் நிலை காணப்­பட்­டது.

இதனால் அவர்­க­ளது வாழ்­வா­தா­ரத்தில் எவ்­வித முன்­னேற்­றமும் இன்றி பாரிய இன்­னல்­களை எதிர்­நோக்க வேண்­டிய நிலை இருந்­தது.

ஆனால், அதனை மாற்­றி­ய­மைத்து நாட்டில் அனை­வ­ருக்கும் சிறந்த கல்­வியை ஏற்­ப­டுத்­து­வதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நோக்­க­மாகும். இதற்­கா­கவே நாம் கடந்த காலத்தை விடவும் அதி­க­மாக கல்­வித்­து­றைக்கு முத­லீடு செய்­துள்ளோம்.

கல்வி பொதுத் தரா­தர சாதா­ரணத் தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்­க­ளுக்கும் உயர்­கல்­வியை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம். இதன்­மூலம் குறித்த சித்­தி­ய­டை­யாத மாண­வர்­களும் உயர்­த­ரக்­கல்­வியை தொடர்ந்தும் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்­பேற்­படும்.

அவர்­க­ளுக்­கான விளை­யாட்டு தொழி­நுட்பம் உள்­ளிட்ட 26 தொழில் ரீதி­யான கற்­கை­நெறி பிரி­வுகள் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. குறித்த 26 கற்கை நெறிபிரிவுகளில் மாணவர்கள் மூன்று பாடங்களில் தங்களது கற்கை நெறியினை தொடருவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இத் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் சுட்டிக் காட்டினார்.