தனது உதவியாளராக மகள் இவன்காவை நியமிக்கவுள்ள ட்ரம்ப்!!

534

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் தலைமை உத­வி­யா­ள­ராக அவ­ரது மகள் இவன்கா ட்ரம்பை நிய­மிக்­க­வுள்­ள­தாக ட்ரம்ப் அறி­வித்­துள்ளார். இவன் ­காவின் கண­வ­ரான ஜெரெட் குஷ்னர் ட்ரம்பின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ராக பதவி வகித்து வரு­கிறார்.

அரச நிர்­வா­கத்தில் தன்­னு­டைய மக­ளான இவன்­கா­விற்கு ஆர்வம் அதி­க­மாக இருப்­பதால் வெள்ளை மாளி­கையில் இவன்­கா­விற்கு ஓர் அலு­வ­ல­கத்தை ட்ரம்ப் ஒதுக்­கினார்.

ஆனால், இது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. ‘நிர்­வாகப் பதவி எதையும் வகிக்­காமல் வெள்ளை மாளி­கையில் இவன்­கா­விற்கு அலு­வ­லகம் ஒதுக்­கு­வது தவறு’ என விமர்­சனம் எழுந்­தது.

இந்த விமர்­ச­னத்தைத் தொடர்ந்து தன்­னு­டைய முதன்மை உத­வி­யா­ள­ராக இவன்­காவை பத­வியில் அமர்த்­து­வ­தாக ட்ரம்ப் அதி­ர­டி­யாக அறி­வித்­துள்ளார்.

இதன்­மூலம் ஜனா­தி­ப­தி­யுடன் முழு நேரமும் இருப்­ப­துடன், அவ­ரு­டைய முக்­கிய நட­வ­டிக்­கை­களைக் கவ­னிக்கும் கூடுதல் பொறுப்பு தற்­போது இவன்­கா­விற்கு கிடைத்­துள்­ளது.

இந்தப் பத­வியைத் தொடர்ந்து எதிர்­கா­லத்தில் அமெ­ரிக்­காவின் அடுத்த ஜனாதிபதி பதவியில் அமர இவன்கா இப்போதே அச்சாரம் போட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.