வீட்டின் மீது மர்ம ஒளி தாக்கி படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!!

761

தமிழகத்தின் வாணியம்பாடி அருகே வானத்தில் இருந்து சக்தி வாய்ந்த ஒளி தாக்கியதில் காயமடைந்த பெண் இன்று மரணமடைந்துள்ளார்.

வாணியம்பாடி அருகே துரிஞ்சாபுரம் கிராமத்தில் கடந்த 24ஆம் திகதி அதிகாலையில், புவனேஸ்வரி என்ற பெண்ணின் வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் ஒளி விழுந்தது.

அப்போது இடி விழும்போது ஏற்படும் சத்தத்தை விட, அதிக சத்தம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சக்திமிக்க ஒளி வீட்டை தாக்கியபோது வீட்டின் ஓடுகள் உடைந்து சிதறின.

இந்தச் சம்பவத்தில், புவனேஸ்வரி படுகாயமடைந்தார். இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நாட்றம்பள்ளி தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப்பகலில் எரி கல் விழுந்து ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது