வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று ம 31-03 -2017 வெள்ளிகிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் தலைமையில் நடராஜ பெருமானுக்கு விசேட யாகம் மற்றும் அபிசேகங்கள் முதலியன இடம்பெற்று 10.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம் பெற்று விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் தனி தனி வாகனங்களிலும் நடராஜரும் பார்வதியும் அசைந்து ஆடி ஆடி வீதி வலம் வந்தமை இன்றைய தினம் விசேட அம்சமாகும்.
ஈற்றில் நடராஜ பெருமானுக்குரிய யாகம் கலைக்கப்பட்டு வழமையான மதிய பூஜையுடன் பகல் திருவிழா நிறைவு பெற மாலை மமீண்டும் வழமை போல நான்கரை மணிக்கு மகா யாகம் தொடங்கப்பட்டது .
அதன் பின் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜையுடன் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப் வாகனத்திலும் திருவீதி உலா வந்து மாலை திருவிழா இரவு ஒன்பது மணியளவில் நிறைவு பெற்றது.