தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரன் ஆபத்தானவர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் யுத்த களத்தில் எல்லோருக்கும் தெரியும் வகையில் போராடினார். எனினும் விக்னேஸ்வரன் அதே நோக்கங்களுக்காக மறைமுக அடிப்படையில் இராஜதந்திர ரீதியில் போராடுவார்.
தெரியும் எதிரியுடன் போராடுவது இலகுவானது. எனினும் தெரியாத மறைமுக எதிரியுடன் போராடுவது மிகவும் ஆபத்தானது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேவையான வகையில் நாட்டை ஆட்டுவிக்க அனுமதியளிக்க முடியாது.
வடக்கில் நாசிவாத கடும்போக்குடைய கட்சியொன்று தேர்தல் வெற்றியீட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.