இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு தன் மனைவி ஷாலினியுடன் வந்தார் அஜித்.
அவர் காரில் வருவதை வெளியிலேயே பார்த்துவிட்ட ரசிகர்கள், ஸ்டேடியத்துக்குள் காரைத் துரத்தி வந்தனர். இதனால் காரிலிருந்து இறங்க முடியாமல் தவித்தார் அஜித்.
போலீஸ் வந்தும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேறுவழியில்லாமல் காரைத் திருப்பி மற்றொரு வழியாக ஸ்டேடியத்துக்குள் சென்றார்.
அதேபோல் விழா அரங்கத்தில் இருந்து கிளம்பும்போதும் ஏராளமானவர்கள் அஜித்தைச் சூழ்ந்து கொண்டனர். அவரால் இருக்கைகளைத் தாண்டி கூட வெளியில் வர முடியவில்லை.
உடனே அவருக்கு முன்னால் வந்த ஷாலினி சிரித்தபடியே வணக்கம் சொல்லி முன்னேற கொஞ்சம் வழிவிட்டது ரசிகர்கள் கூட்டம். அதைப் பயன்படுத்தி போலீஸ் உதவியுடன் வெளியே சென்றார் அஜித்.