ஜப்பானில் திருமணமாகாத பெண்கள் பலர் முழு நேர இல்லத்தரசிகளாக இருக்க விரும்புகின்றனர். ஜப்பான் நிறுவனம், இணையதளம் மூலமாக 15 வயது முதல் 39 வயதுடைய பலரிடம் ஒரு ஆய்வு நடத்தியது.
அவர்களில் 34.2 சதவீதம் பேர் திருமணத்திற்குப் பின்னர் முழு நேர இல்லத்தரசிகளாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இதில் 38.5 சதவீதம் பேர் திருமணத்திற்குப் பின் முழு நேர இல்லத்தரசிகளாக இருப்பதை விரும்பவில்லை.
இந்த ஆய்வில் 19.3 சதவீத திருமணமாகாத ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி முழு நேர இல்லத்தரசியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இதை எதிர்ப்பவர்கள் 30.2 சதவீத ஆண்கள்.
இந்த ஆய்வின் மூலம் மூன்றில் ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
வளர்ந்த தொழில் துறை நாடான ஜப்பானில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதாலும் பனிச்சுமை அதிகமாக இருப்பதாலும் பெண்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
மேலும, வரும், 2050ம் ஆண்டிற்குள் ஜப்பானில் பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கை 40 சதவீதம் குறையும் என்று சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.