70 வயது நபருக்கு 6 மனைவிகள், 54 குழந்தைகள்!!

257

பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது.

 

பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று பீ.பீ.சி செய்தியாளர் மொஹம்மத் காஜ்மி தெரிவிக்கிறார். அப்துல் மஜீத் ஓட்டுநராகப் பணியாற்றியவர்.

குவெட்டாவில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கில் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் நுஷ்கி மாவட்டம் அமைந்துள்ளது.

அப்துல் மஜீத் ஆறு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதில் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர், தற்போது நான்கு மனைவிகளுடன் வசித்துவருகிறார்.

22 மகன்கள், 20 மகள்கள் என 42 குழந்தைகள் மற்றும் நான்கு மனைவிகளைக் கொண்ட அப்துல் மஜீத் தான் பெரிய குடும்பத்தைக் கொண்டவராக இருக்கிறார்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னர், 36 குழந்தைகளுக்கு தந்தையான ஜான் மொஹம்மத் கில்ஜி தான் அதிக குழந்தைகள் பெற்றவர் என்று குவெட்டா நகரவாசிகள் கூறிவந்தனர்.

இப்போது அதிக குழந்தை பெற்றவர் பட்டியலில் அப்துல் மஜீத், எளிதில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறார்.