ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிக்கான கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை!!

522

 
ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.

இலங்கை 23 வயதுக்குற்பட்டோர் மற்றும் பாகிஸ்தான் 23 வயதுக்குற்பட்டோர் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் மற்றும் சபர் கோஹார் தலா 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் செஹான் ஜயசூரிய 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 23.5 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் சமரவிக்ரம 45 ஓட்டங்களை குவித்தார். இந்நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக செஹான் ஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.