வவுனியா மாவட்ட உள்ளுர் உற்பத்திகளுக்கென இணையத்தளம் ஆரம்பம்!!(படங்கள்)

429


உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு வவுனியா மாவட்டத்தில் இணையத்தள அங்குராப்பண நிகழ்வு வவுனியா நெல்லி ஸ்டார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

USAID, FOSDO ஆகிய நிறுவனங்களின் அனுசரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உள்ளுர் உற்பத்திகள் தொடர்பான விபரங்களினை வெளிப்படுத்தும் முகமாக இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் இணையத்தளத்தில் சென்று பார்ப்பது தொடர்பான கையேடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.இவ் இணையத்தில் உள்ளுர் உற்பத்திகளான விளக்குமாறு தயாரித்தல், பனை பொருள் உற்பத்தி, மட்பாண்ட உற்பத்தி, நெசவு உற்பத்தி, பன்னைவேலை, இளைநார் வேலைகள், பளிங்குரு உற்பத்தி, ஊதுபத்தி உற்பத்தி, நூல் ஆடைகள் உற்பத்தி, என பலதரப்பட்ட உற்பத்திகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில், USAID நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரி கிறிஸ்ரிமர்டின்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மேகநாதன், பொஸ்டோ நிறுவன நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் செந்தில்குமரன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வெண்கல செட்டிகுள பிரதேச செயலாளர் என்.கமலதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.vav1 vav2 vav3 vav4 vav5 vav6 vav7 vav8