வவுனியாவில் 600 மாணவர்கள் ஒன்றிணைந்து சித்திரம் வரையும் நிகழ்வு!!

425

 
வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (06.04.2017) காலை 9 மணியளவில் வவுனியா பிரதான பொலிஸ் நிலைய கட்டடத் தொகுதியில் வன்னி பிராந்திய பாடசாலை 600 மாணவர்களை ஒன்றிணைத்து மாபெரும் சித்திரம் வரையும் நிகழ்வு ஒன்றினை வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் மேற்கொண்டார்.

இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தினூடாக நாட்டின் அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் தரம் 7,8,9,10 மாணவர்களை ஒன்றிணைத்து இச்சித்திரப்போட்டி நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹக புஸ்பகுமார, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வகே, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, வவுனியா வடக்கு கல்வி வலயப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வீரசிங்கம், அதிபர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வு மதியம் 12.30 மணியளவில் நிறைவடைந்தது.