விலங்குகளை விடவும் மிக மோசமான குணம் எங்களுக்குள் உண்டு என்பதை மனிதர்கள் சிலர் நிரூபிக்கும் வண்ணம் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
குவைத்தில் கார் ஒன்றின் மீது ஏறிய குரங்கை பாடாய் படுத்தி உள்ளனர். இந்த கொடூர காட்சியை வீடியோவாக படமெடுத்து இணையத்திலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
கார் மீது குரங்கு ஏறியதும் படு வேகமாக 100 கிலோமீற்றர் வேகத்தில் காரை ஓட்டியுள்ளனர். இதைப் பார்த்து பயந்து போன குரங்கு கார் கண்னாடியில் தனது கால், கைகளால் இறுகப் பிடித்தபடி உயிர் பயத்தில் கதறித் துடித்தது.
பிடியை விட்டால் மரணம் என்பதால் அந்தக் குரங்கு உயிரைக் காப்பாற்ற துடித்ததை அந்த இளைஞர்கள் விழுந்து விழுந்து சிரித்தபடி ரசித்துள்ளனர்.
இந்த செய்தியை வெளியிட்டுள்ள அரபு நாளிதழான அல் அன்பா சில இளைஞர்களின் பொறுப்பற்ற செயல் இது. மிகவும் மோசமான, இரக்கமற்ற செயல் என்றும் வர்ணித்துள்ளது. எனினும் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை.