அதிக வியர்வையா?

614

 

இளம் பெண்கள் ஏனைய பருவ காலங்களைக் காட்டிலும் கோடை காலத்தில் அதிக வியர்வையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட இடத்தை தேடுவது, சந்தன குளியல் என நிவாரணங்களைத்தான் தேடுகிறார்கள். ஆனால் வியர்வை அதிலும் அதிகப்படியான வியர்வை ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்தால், அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வர்.

அதிகட்சமாக வியர்வை வெளியாவதற்கு காரணம், போதிய அளவிலான உறக்கமின்மை, பதற்றம், பயம், பயத்தின் காரணமாக அதிகரிக்கும் இதயத்துடிப்பு, உடல் எடை குறைவது, அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, சீரற்றமாதவிடாய், உடல் இரவிலும் சூடாக இருப்பதாக உணர்வது போன்றவைகள் தான்.

இயல்பான மனநிலையின் போது புற மற்றும் அகச் சூழலால் ஏற்படும் அழுத்தம் காரணமாக மனத்தின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நரம்பு மண்டலம் அதிகளவில் தூண்டப்பட்டு வியர்வை சுரந்து வெளியாகிறது. ஒரு சிலருக்கு ரைரொய்ட் பிரச்சினை காரணமாக உள்பகுதியின் இயக்கத்தில் சீரற்ற தன்மை உருவாகிறது. இதன் காரணமாகவும் அதிகளவிலான வியர்வை வெளியேறும், மாதவிடாய் பருவத்தின் போது சுரக்கும் ஈஸ்ட்ரோஜேன் என்ற ஹோர்மோன் குறைபாட்டாலும் அதிகளவிலான வியர்வை ஏற்படும்

தினமும் தவறாமல் யோகா அல்லது தியானம் செய்வது தான் இதற்கான சரியான தீர்வு. அத்துடன் சமச்சீரான சத்தான உணவை நேரம், அளவு ஆகியவற்றுடன் சாப்பிட்டு வருவதை பழக்கப்படுத்திக் கொண்டு மனதை இயல்பாக வைத்திருக்கவேண்டும்.