சீனாவில் மலைச் சிகரங்களை இணைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் உலகின் மிக உயரமான பாலமாக விளங்குகிறது.
பேய்பான்ஜியாங் பாலம் என பெயரிடப்பட்டுள்ள இப் பாலம், சீ தியூ எனும் நதியொன்றுக்கு மேலாக 565 மீற்றர் (1854 அடி) உயரத்தில் உள்ளது.
இப் பாலத்தின் நான்கு வழி வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. இப் பாலத்தின் நீளம் 1341 மீற்றர்களாகும். 100 கோடி சீனா யுவான் (சுமார் 2152 கோடி ரூபா) செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
இப் பாலமானது யுனான் மற்றும் குய்ஸோ ஆகிய இரு மாகாணங்களை இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யுனான் மாகாணத்தின் ஸுவான்வேய் நகரிலிருந்து குய்ஸோ மாகாணத்தின் ஷுய்சேங் நகரை அடைவதற்கு முன்னர் 4 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன.
ஆனால், இப் பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின் இப் பயண நேரம் ஒரு மணித்தியாலமாக குறைந்துள்ளது.








